விருப்பு வெறுப்புக்களைக் கடந்து எல்லோருமாக இணைந்து வடமாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்ளுங்கள் என இந்தியா கூறியுள்ளது.
இந்தநிலையில் வடமாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளர் சுமந்திரன் என தமிழரசுக்கட்சி ஆணித்தரமாக கூறியுள்ளதென்றால் யாழில் இருக்கக்கூடிய இந்திய துணைத்தூதரகத்தின் இறுதி முடிவு என்று தான் கூறப்படுகின்றது.
அந்தவகையில் அண்மைக்காலங்களில் இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இளம் அரசியல்வாதிகள், இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற கருத்தாடலை ஆரம்பித்துள்ளது.
இப்போதிருக்கக்கூடிய சூழ்நிலையில் இந்தியா தனக்கு ஆதரவான ஒருவரை வடமாகாண முதலமைச்சராக ஆக்குகின்ற கனவில் தீவிரமாக இருக்கின்றது. அந்த அடிப்படையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் சுமந்திரனை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு இருக்கின்றது.
ஒட்டுமொத்தத்தில் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு வாக்களிக்க வேண்டிய பொறுப்பு மட்டும் தான் மக்களுக்கு உரியதே ஒழிய, யார் முதலமைச்சர் என்று இந்தியா முடிவெடுத்துவிட்டது.
இலங்கைத் தமிழரசுக்கட்சியைப் பொறுத்த வரையில் நாடாளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியை வரவழைத்து வெற்றியடையச் செய்ய வைத்த பெருமை சுமந்திரனைச் சாரும்.
தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவில் தோல்வி, அதன்பின்னர் இடம்பெற்ற பொது ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் சுமந்திரனின் தொகுதியிலே அதிக வாக்குகளைப் பெற்றுக்கொண்டதில் தோல்வி, நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வட்டாரத்தில் தோல்வி, வரப்போகின்ற மாகாண சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வடமாகாண சபையைக் கைப்பற்றி விட்டது என்ற பெருமையொடு சுமந்திரன் அரசியலில் இருந்து விடைபெறுவார் என எல்லோரும் எதிர்பார்க்கின்றனர்.
வடக்கு மாகாண முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் இளஞ்செழியன் என்ற பெயர் சமூக ஊடகங்களில் அதிகமாக பேசப்பட்டு வரும் நிலையில் அனைவரும் சேர்ந்து இளஞ்செழியனின் பெயரை முன்மொழிந்த விட்டாலும் என்ற அச்சத்தில் கட்சியின் முடிவே எமது முடிவு என சுமந்திரனின் பெயரை முன்மொழியப் போகின்றார்கள் இதுவே சி.வி.கே சிவஞானத்தின் அவசரத்திற்கு காரணமாகும்.
இந்தநிலையில் கட்சியின் முடிவே தனது முடிவு என சுமந்திரனும் அறிவித்துள்ள நிலையில் வடமாகாணத்தில் மும்முனைப் போட்டிக்கு அதிகம் சந்தர்ப்பம் இருக்கின்றது.
இது குறித்த மேலும் பல விடயங்களைப் பற்றி பேசுகின்றது ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி
https://www.youtube.com/embed/j6ZKoiHlk_s

