கனடாவில் (India) பட்டப்பகலில் வீட்டுக்கு வெளியே இந்திய தொழிலதிபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வீட்டின் வெளியே அவர் தனது சிற்றூந்தில் அமர்ந்திருந்த போது மர்ம நபர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
கனடாவில் தொழிலதிபரும், Canam இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவருமான தர்ஷன் சிங் சாஹ்சி (68), பிரிட்டிஷ் கொலம்பியாவின் அபோட்ஸ்ஃபோர்டில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
எவரும் கைது செய்யப்படவில்லை
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது, சிற்றூந்தில் இருந்த சாஹ்சி காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார்.

அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டும் எந்த பலனும் இல்லை. அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
குறித்த சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்றும், விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும் கனடா காவல்துறை தெரிவித்துள்ளது.
கனடாவில், இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் தர்ஷன் சிங் சாஹ்சி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

