முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இராணுவ வீரர்களை மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிய ரஷ்யா!

ரஷ்ய (Russia) இராணுவத்தில் சிக்கிய 45 இந்திய (India) இராணுவ வீரர்கள் மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பபட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைன் (Ukraine) –  ரஷ்ய போர் கடந்த 2022 முதல் தொடங்கி 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது.

இந்த போரில் ரஷ்ய ராணுவத்தில் இந்திய இளைஞர்கள் சேர்க்கப்பட்டு போரில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர்.

இந்திய பிரதமர்

இந்நிலையில் இந்திய இளைஞர்கள் சிலர் தங்களை காப்பாற்றும்படி காணொளி வெளியிட்டிருந்தனர்.

இராணுவ வீரர்களை மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிய ரஷ்யா! | Indian Youth Trapped In Russian Army

குறித்த காணொளி சர்ச்சையான நிலையில் சமீபத்தில் இந்திய பிரதமர் மோடி  (Narendra Modi) ரஷ்யா சென்று அதிபர் புதினை (Vladimir Putin) சந்தித்தபோது ரஷ்ய இராணுவத்திலுள்ள இந்திய இளைஞர்களை பணியிலிருந்து விடுவிக்க வலியுறுத்தியிருந்தார்.

இதற்கு ரஷ்யா இசைவு தெரிவித்த நிலையில் இதுவரை 45 இந்தியர்கள் ரஷ்ய இராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்ப அனுமதித்துள்ளனர்.

போர் முனை

இந்நிலையில் விடுவிக்கப்பட்டவர்களில் தெலுங்கானா (Telangana) உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 45 இந்தியர்கள் நேற்றைய (14)  தினம் இந்தியாவிற்கு திரும்பியுள்ளனர். 

இராணுவ வீரர்களை மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிய ரஷ்யா! | Indian Youth Trapped In Russian Army

மேலும் 50 இந்தியர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று வெளியுறவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவில் மாதம் ரூ.1 லட்சத்தில் வேலைவாய்ப்பு எனக்கூறி அழைத்துச்செல்லப்பட்ட இவ்விளைஞர்கள் உக்ரைன் போர் தொடங்கியதும் வலுக்கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் சேர்க்கப்பட்டுப் போர் முனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்