இலங்கையின் காற்றின் தரச் சுட்டெண் (SLAQI) படிப்படியாக நாட்டின் பல பிராந்தியங்களில், மிதமான மட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய ஊடகப் பேச்சாளர் அஜித் குணவர்தன, நேற்றைய (01) நிலவரப்படி பல பகுதிகளில் காற்றின் தரச் சுட்டெண் அளவீடுகள் 100 முதல் 110 வரை இருந்தது.
எனினும் அடுத்த இரண்டு நாட்களுக்குள் கணிசமாக மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் குணவர்தன பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.
நகரங்களில் காற்றின் தரச் சுட்டெண்
சமீபத்தில் நிலவிய பாதகமான காலநிலை காரணமாக கடந்த இரண்டு நாட்களில் கொழும்பு உட்பட, நாடு முழுவதும் உள்ள பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளது.
நேற்று, பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரச் சுட்டெண் சற்று ஆரோக்கியமற்ற நிலையிலும், வவுனியா, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி, புத்தளம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, களுத்துறை மற்றும் அனுராதபுரம் ஆகிய இடங்களில் மிதமான அளவிலும் இருந்ததாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், இன்று காற்றின் தரச் சுட்டெண் அளவு 86 – 120 க்கு இடையில் இருக்கும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கணித்துள்ளது.
மருத்துவ ஆலோசனைகள்
இது வடக்கு பிராந்தியத்தில் இருந்து நடக்கும் எல்லை தாண்டிய நிலைமைகளின் காரணமாக பெரும்பாலான நகர்ப்புறங்களில் சற்று ஆரோக்கியமற்ற அளவைக் குறிக்கிறது.
வவுனியா, நுவரெலியா, எம்பிலிப்பிட்டிய, அம்பாந்தோட்டை மற்றும் அனுராதபுரம் பகுதிகளில் இன்று மிதமான மட்டத்தில் காணப்படும்.
இந்த நிலை உணர்திறன் கொண்ட நபர்களுக்கு சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தினால் மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு பொது மக்களை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.