Courtesy: Sivaa Mayuri
இலங்கையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் நிலை குறித்து வெரைட் ரிசேர்ச் (Verité Research) தகவல்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி 2023 வரவு செலவுத் திட்டத்தின் 89 வீதத்துக்கும் அதிக பெறுமதியான செலவீன முன்மொழிவுகளில் முன்னேற்ற தகவல்கள் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
முன்னேற்றங்கள்
வரவு செலவுத்திட்டத்தில் மொத்தமாக செலவீனங்களுக்காக ஒதுக்கப்பட்ட 49.3 பில்லியன் ரூபாய்களில், 43.8 பில்லியன் ரூபாய்களுக்குரிய திட்டங்களே முன்னேற்றம் இல்லாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2022இல், ஒதுக்கப்பட்ட நிதியிலும் 93வீத திட்டங்களில் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கவில்லை.
இந்தநிலையில் 2017ஆம் ஆண்டு முதல் சமர்ப்பிக்கப்பட்டு வந்த வரவு செலவுத்திட்டங்களில் கடந்த இரண்டு வருடங்களுக்குரிய தகவல்களே மோசமானவையாக கருதப்படுகிறது.
திட்டங்களுக்காக ஒதுக்கீடு
கடந்த இரண்டு ஆண்டுகளில் வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளாக அதிக ஒதுக்கீடுகளைப் பெற்ற சமூக நலக் கொடுப்பனவுகளை பற்றிய பார்வைத்திறன் குறைவாகவே உள்ளதாக வெரைட் ரிசர்ச் குறிப்பிட்டுள்ளது
2022இல் இந்த முன்மொழிவுகளுக்காக 26.8 பில்லியன் ரூபாய்களும், 2023இல் 43 பில்லியன் ரூபாய்களும் இந்த திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன.
முன்மொழிவுகளின் எண்ணிக்கையில் 16வீத முன்மொழிகள் மட்டுமே 2023இல் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்த 500 மில்லியன் ரூபாய் செலவழிக்கும் வரவு செலவுத் திட்டம் முன்மொழிவும் செயல்படுத்தப்படாமல் இருந்ததாக வெரைட் ரிசர்ச் குறிப்பிட்டுள்ளது.