அனைத்து சாரதி அனுமதிப் பத்திரங்களும் அடுத்த பெப்ரவரி மாதத்திற்குள் அச்சிடப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் பிறகு, வழக்கம் போல் தினமும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும் என அதன் ஆணையாளர் ஜெனரல் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடும் பணி
அவர் மேலும் தெரிவிக்கையில், அச்சிடுவதற்கு அட்டைகள் இல்லாததால் சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்குவது நிறுத்தப்பட்டது.

அதற்கு பதிலாக, தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது மற்றும் அச்சிடப்பட வேண்டிய சாரதி அனுமதிப் பத்திரங்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்து ஐம்பதாயிரத்தை நெருங்குகிறது.
சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடும் பணிகள் மூன்று இடங்களில் மேற்கொள்ளப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

