நாட்டில் கசினோ மற்றும் பந்தயம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடுவோருக்கு உள்நாட்டு இறைவரி திணைக்களம் (Inland Revenue Department) அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட திணைக்களம், பெப்ரவரி மாதம் தொடர்பான வரிகளை இம்மாதம் 7ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.
இதேபோல், மார்ச் மாதம் தொடர்பான வரிகளை ஏப்ரல் முதல் வாரத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ செலுத்த வேண்டும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.