ஊடகவியலாளர் சவுக்கு சங்கருக்கு (savukku shankar) எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து இந்திய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனக்கு எதிரான வழக்குகளை இரத்து செய்ய கோரி ரிட் மனு ஒன்றை சவுக்கு சங்கர் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தார்.
16 வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை
இந்நிலையில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேல் முறையீடு செய்ய சவுக்கு சங்கருக்கு அனுமதி
மேலும் தற்போது புதிதாக பதிவு செய்யப்பட்ட குண்டர் சட்ட வழக்கை எதிர்த்தும் மேல் முறையீடு செய்ய சவுக்கு சங்கருக்கு அனுமதி அளித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றம் பிணை வழங்கிய பிறகும் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, மேலும் என்னென்ன வழக்குகள் போடப்பட்டுள்ளன போன்ற விபரங்களையும் தாக்கல் செய்ய சவுக்கு சங்கர் தரப்புக்கு ஆணையிட்டார்.