முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிறிலங்கா காவல்துறையின் உள்ளக சர்ச்சைகள் அம்பலம்! ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்

இலங்கை காவல்துறை திணைக்களத்தில் ‘நீறு பூத்த நெருப்பாக’ இருந்த உள்வீட்டு பிரச்சினை பொது வெளிக்கு வந்து புலனாய்வுத்துறை வரை சென்றுள்ளது.

தேசிய காவல்துறை தலைமையகத்தில் நிர்வாக பொறுப்பதிகாரியான பிரதி காவல்துறை மா அதிபரான லலித் பத்திநாயக்க மீது ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தேசிய காவல்துறை ஆணைக்குழு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவில் காவல்துறை அதிபர் பிரியந்த வீரசூரிய முறைப்பாடொன்றை வழங்கியுள்ளார்.

இந்த உள்வீட்டு பிரச்சினை தொடர்பில் வெளிவந்திருக்கும் தகவல்களாக, இலங்கை காவல்துறை திணைக்களத்தின் நிர்வாக பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் பிரதி காவல்துறை மா அதிபர், காவல்துறை மா அதிபர் மற்றும் தென் மாகாண பொறுப்பதிகாரி பிரதி காவல்துறை மா அதிபர் கித்சிறி ஜயலத் தொடர்பில் தவறான, களங்கம் ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளதாகவே தெரிவிக்கப்படுகிறது.

லலித் பத்திநாயக்கவின் செயற்பாடு

இதனால் காவல்துறை திணைக்களத்தில் இரு பிரிவுகளாக பிரிந்து கடமையாற்றுவதாகவும் தெரியவந்துள்ளது. 

உள்ளக தகவல்களின், படி லலித் பத்திநாயக்க வெளியாருடன் சேர்ந்து உள்ளக தகவல்கள் மற்றும் டெண்டர் தகவல்கள் முதல் கொண்டு வெளியில் வழங்கியுள்ளார்.

சிறிலங்கா காவல்துறையின் உள்ளக சர்ச்சைகள் அம்பலம்! ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல் | Internal Problems Within The Sri Lanka Police

அதற்கான 12 தொலைபேசி உரையாடல்கள் கிடைக்க பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

ஏன் பிரதி காவல்துறை மா அதிபரான லலித் பத்திநாயக்க இவ்வாறு செயற்பட்டார். இலங்கை காவல்துறை திணைக்களத்தில் லலித் பத்திநாயக்க சிரேஷ் காவல்துறை அதிகாரியாவார்.

காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கும் மேல் சேவை மூப்பை கொண்டவர்.தற்போது இவர் காவல்துறை திணைக்களத்தின் நிர்வாகத்திற்கு பொறுப்பானவராக கடமையாற்றுகிறார்.

காவல்துறை மா அதிபர் பதவி 

லலித் பத்திநாயக்க 2031 ஆம் ஆண்டு வரை சேவையாற்றுவதற்கான காலம் இருக்கிறது. அத்தோடு காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு 2029 வரையே சேவை காலம் உள்ளது.

சிறிலங்கா காவல்துறையின் உள்ளக சர்ச்சைகள் அம்பலம்! ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல் | Internal Problems Within The Sri Lanka Police

காவல்துறை மா அதிபர் நியமனத்தின் போது தனது பெயரும் சிரேஷ்டத்துவத்தின் படி பிரேரிக்கப்படும் என லலித் பத்திநாயக்க நினைத்தார்.ஆனால் உயர்பதவிகளுக்கான சபைக்கு அவரின் பெயர் சமர்ப்பிக்கப்படவில்லை.

அதனால் அவர் மனதளவில் பாதிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு செயற்பட்டாரோ தெரியவில்லை.ஜனாதிபதியின் தலையீட்டில் பிரியந்த வீரசூரியவின் பெயர் மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டு காவல்துறை மா அதிபர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறே பிரச்சினை உருவாகியுள்ளது.இந்த பிரச்சினை காவல்துறை திணைக்களத்தில் இன்று உருவாகியது அல்ல வரலாற்றில் அநேக தடவைகளில் இடம்பெற்றுள்ளது.

காவல்துறைக்கு பாரிய சிக்கல்

காவல்துறை திணைக்களத்தில் மூத்த அதிகாரிக்கே நிர்வாக பொறுப்பு வழங்கப்படுவது வழமையாகும்.அத்தோடு சிரேஷ்ட அதிகாரிக்கே காவல்துறை மா அதிபர் நியமனம் வழங்கப்படும்.

சிறிலங்கா காவல்துறையின் உள்ளக சர்ச்சைகள் அம்பலம்! ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல் | Internal Problems Within The Sri Lanka Police

அந்த நியமனத்தின் போது ஏற்படும் சில குறைப்பாடுகள் இருவருக்கிடையில் முரண்களை ஏற்படுத்துகின்றன.அது நீண்ட வரலாற்றைக் கொண்டதாகும். அதன் ஒரு உதாரணமாக காவல்துறை மா அதிபராக இலங்ககோன் இருக்கும் போது எட்மின் காமினி நவரத்த வகித்துள்ளார்.

இவர்கள் ஆரம்பகாலத்தில் ஒன்றாக வேலை செய்து கொண்டு செல்கையில் கடைசி காலத்தில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.இவ்வாறு பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாகவே நாம் இதை நோக்குகிறோம்.ஆனால் அவை வெளியில் வரவில்லை.இன்றை பிரச்சினை வெளியில் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடுகள் காவல்துறையினரின் செயற்பாடுகளுக்கு பாரிய சிக்கல்களை தோற்றுவிக்கலாம்.

you may like this

https://www.youtube.com/embed/lI762n0B0_4

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.