முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி போராட்டத்தில் ஈடுபடும் தாயிடம் பொலிஸார் விசாரணை

காணாமல் ஆக்கப்பட்ட தனது
உறவுகளை கண்டுபிடிக்கக் கோரி இலங்கையில் நீண்டகால தொடர்ச்சியான
போராட்டத்தை முன்னெடுத்து வரும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ்த் தாய்,புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்பிய குற்றச்சாட்டின் கீழ் பொலிஸில் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் அம்பாறை அலுவலகத்தினால்
மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக, வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக,
அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின்
தலைவி தம்பிராசா செல்வராணி, திருக்கோவில் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும்
மகளிர் பிரிவுக்கு கடந்த 8ஆம் திகதி அழைக்கப்பட்டிருந்தார்.

இராணுவம் விடுத்த கோரிக்கை

பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் (CTID) தலைமையகத்திற்கு கடற்படை மற்றும் இராணுவம் விடுத்த கோரிக்கைக்கு அமைய விசாரணை மேற்கொள்ளப்படுவதாக,
சுமார் இரண்டு மணிநேரம் அவரிடம் விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரி
தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி போராட்டத்தில் ஈடுபடும் தாயிடம் பொலிஸார் விசாரணை | Interrogate Mother Protest Disappeared Persons

தன்னுடைய தனிப்பட்ட விபரங்கள் அடங்கிய கோவை, சீருடை அணிந்திருந்த பொலிஸ்
உத்தியோகத்தரிடம் கையளிக்கப்பட்டிருந்ததோடு, தன்னிடம் கேட்கப்பட வேண்டிய
கேள்விகளும் அந்த
அதிகாரியிடம் வழங்கப்பட்டிருந்ததாக தம்பிராசா செல்வராணி ஊடகவியலாளர்களிடம்
தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் எத்தனை வருடங்கள் இருந்தீர்கள்? என கேள்வி
எழுப்பிய பொலிஸ் உத்தியோகத்தர், அக்காலப்பகுதியில் எத்தனை இராணுவ
உறுப்பினர்களை கொலை செய்தீர்கள் என தன்னிடம் கேள்வி எழுப்பியதாக  தம்பிராசா செல்வராணி கூறியுள்ளார். 

பதினைந்து வருடங்களுக்கு முன்னர் அழிக்கப்பட்டதாக இலங்கை அரசாங்கம்
அறிவித்திருந்த விடுதலைப் புலிகளை இந்தியாவிலும் பிரான்சிலும் மீளக்
கட்டியெழுப்ப முயற்சி நடப்பதாகச் செய்திகள் வெளியாகி வருவதாகக் குறிப்பிட்டு, நீங்கள் இலங்கையில் இருந்து அதற்குத் தலைமை தாங்குகிறீர்களா என விசாரணையை
மேற்கொண்ட பொலிஸ் அதிகாரி அவரிடம் கேட்டுள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் 

“எனக்கு இப்போது 53 வயது. எதிர்வரும் 12ஆம் மாதம் 24ஆம் திகதி 54 வயது. எனக்கு
நடந்து என்னுடைய வேலைகளை செய்துகொள்ள எனக்கு உடம்பில் சக்தியில்லை.

இப்படி
இருக்கையில் நான் எங்கே? நீங்கள் தானே ஒழிச்சுப்போட்டுட்டோம்,
அழிச்சுப்போட்டுட்டோம் என சொல்கிறீர்கள்?” என செல்வராணி பதிலளித்துள்ளார். 

காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி போராட்டத்தில் ஈடுபடும் தாயிடம் பொலிஸார் விசாரணை | Interrogate Mother Protest Disappeared Persons

இந்நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எனக் கூறி தேடப்படுவது முன்னாள் புலி
உறுப்பினர்களைத் தானே? என பொலிஸ் அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

“அவர்கள் வேறு. அவர்கள் இப்போது கடவுள். பாதுகாப்பு படையினரிடம்
ஒப்படைத்தவர்களை தேடி வருகிறோம். சரணடைந்தவர்கள், மேலும் நாங்கள் ஒப்படைத்த
சிறுவர்களை தேடுகிறோம்” என அவர் பதிலளித்துள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் உங்கள் இலட்சிம் என்னவென பொலிஸ்
அதிகாரி கேட்டபோது, தனது அன்புக்குரியவர்களின் கதி என்ன என்பதை அறிவதற்காகவே
தாம் போராடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரி

இந்த போராட்டம் காணாமல் ஆக்கப்பட்ட சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைவரின்
நலனுக்காகவா என பொலிஸ் அதிகாரி கேள்வியெழுப்பிய போது, “அனைவரின் தலைவிதியைப் பற்றிய உண்மையை வெளிப்படுத்த வேண்டுமென்பது
தனது நோக்கம்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையி்ல், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களைக் காணாமல்
ஆக்கியது யார் என்பது தெரியவரும் என்பதால் அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டுமா
என பொலிஸ் அதிகாரி, தம்பிராசா செல்வராணியிடம் கேட்டுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி போராட்டத்தில் ஈடுபடும் தாயிடம் பொலிஸார் விசாரணை | Interrogate Mother Protest Disappeared Persons

இதற்கு, குற்றவாளிகள் கொல்லப்படக்கூடாது, சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட வேண்டுமென
அவர் கூறியுள்ளார். 

மேலும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தனது உறவினர்களைக் கண்டறிய ஜெனீவா மனித உரிமைகள்
பேரவை அமர்வு உட்பட உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தாம் மேற்கொண்ட
போராட்டங்களின் புகைப்படங்களும் தன்னிடம் விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரியிடம்
இருந்த கோவையில் காணப்பட்டதாக தம்பிராசா செல்வராணி ஊடகவியலாளர்களிடம்
தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.