பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பகிடிவதைச் சம்பவங்களை தடுப்பது குறித்துக் கலந்துரையாட அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உயர்கல்விப் பிரதியமைச்சர் மருத்துவர் மதுர விதானகே இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட இரண்டாம் ஆண்டு மாணவனொருவன் பகிடி வதை காரணமாக அண்மையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
சிறைத்தண்டனை
அதன் எதிரொலியாக பல்கலைக்கழகங்களில் பகிடிவதையைத் தடுக்கும் வகையிலான செயற்பாடுகள் குறித்து ஆராய உயர்கல்வி அமைச்சு, பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கிடையே பகிடிவதை தொடர்பான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் நிரூபிக்கப்பட்டால் பத்து வருட சிறைத்தண்டனையும் விதிக்க சட்டத்தில் இடமிருப்பதாக சட்ட வல்லுனர்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

