இலங்கை மற்றும் மாலைதீவிற்கான IOM நிறுவனத்தின் பிரதானி கிறிஸ்ரின்
பாகோ, அண்மையில் புதிதாக பதவியேற்றதனைத் தொடர்ந்து, முதற்தடவையாக யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார்.
மாவட்டத்தின் நிலை..
இந்நிலையில், அவர் மரியாதை நிமித்தமாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனை இன்றையதினம்
(30.01.2025) பி. ப. 01.45 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.
இதன்போது, மாவட்டத்தின் தேவைப்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும், இச்சந்திப்பில் IOM நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.