இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன முக்கியஸ்தர்கள் இருவருக்கு வழங்குவதற்காக இரண்டு ஐபோன்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 16 ரக இரண்டு தொலைபேசிகளே இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்காக 711,900 மொத்தமாக செலுத்தப்பட்டுள்ளது.
அதாவது ஐபோன் ஆடம்பர தொலைபேசியொன்றுக்கு 355,950 வீதம் செலுத்தப்பட்டுள்ளது.
முதற்தடவையாக பதிவான சம்பவம்
குறித்த ஐபோன்களை கொள்வனவு செய்வதற்காக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நடைமுறை வங்கிக் கணக்கில் இருந்து 0043051 இலக்க காசோலை பயன்படுத்தப்பட்டுள்ளது.

கூட்டுத்தாபன தலைவர்களுக்கு நிறுவன செலவில் வாகனம், எரிபொருள், தொலைபேசிக் கட்டணம் போன்றவை மட்டுமே இதுவரை வழங்கப்பட்ட நிலையில், ஐபோன் வழங்கும் சம்பவமொன்று இப்போது முதற்தடவையாக பதிவாகியுள்ளது.


