ஈரான் (Iran) தனது வான் எல்லையை மீண்டும் மூடியுள்ளதால் மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான், இன்று (14.07.2025) காலை முதல் தனது மேற்கு மற்றும் தென்மேற்கு வான்பரப்பை தற்காலிகமாக மூடியதாக அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.
ஈரானின் இந்த நடவடிக்கை காரணமாக பல சர்வதேச விமானங்கள் ஈரான் வான்பரப்பைத் தவிர்த்து பாகிஸ்தான், கத்தார் மற்றும் துருக்கி வழியாக பயணிக்கின்றன.
வான்பரப்பை மூடும் நடவடிக்கை
இதனால் விமான நிலையங்களில் தாமதம் மற்றும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
கடந்த வாரம், ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கிடையில் மீண்டும் உளவுத்துறை தாக்குதல், சைபர் தாக்குதல்கள் மற்றும் கடல் ரீதியான பதில்கள் இடம்பெற்றுள்ளன.
ஜூலை 10 அன்று, ஈரானில் உள்ள இராணுவ முகாமில் ஏற்பட்ட படுகாயம் மற்றும் வெடிவிபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால், பாதுகாப்பு காரணங்களுக்காக வான்பரப்பை மூடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஈரான் விளக்கம் அளித்துள்ளது.
ஈரான் ஜனாதிபதிக்கு காயம்
இந்நிலையில், கடந்த மாதம் ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸ்கியான், ஈரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் முகமது பாகேர், நீதித்துறை தலைவர் மோசெனி எஜெய் உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஈரான் தேசிய கவுன்சில் கூட்டம் நடந்த கட்டடத்தை குறி வைத்து ஆறு ஏவுகணைகளை இஸ்ரேல் ஏவியது.
உடனடியாக ஆபத்து கால வழியாக அங்கிருந்த அனைவரும் வெளியேறினர். இஸ்ரேல் (Israel) நடத்திய இந்த தாக்குதலில் ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸ்கியான் காயம் அடைந்தாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல் தன்னை கொல்ல சதி செய்வதாக மசூத் பெஸ்கியான் ஏற்கனவே குற்றம்சாட்டி இருந்த நிலையில் தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.