ஈரான் (Iran) மற்றும் இஸ்ரேல் (Israel) இடையே நிலவும் இராணுவ நிலைமை காரணமாக, லெபனானில் (Lebanon) வசிக்கும் இலங்கையர்களை பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
லெபனானில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது.
அத்துடன், தற்போதைய இராணுவ நிலைமை குறித்து விழிப்புடன் இருக்குமாறு இலங்கையர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
கடவுச்சீட்டின் நகல்
மக்கள் நெரிசலான இடங்களுக்குச் செல்வதையும், இரவு நேர நிகழ்வுகளில் பங்கேற்பதையும், விழாக்கள் மற்றும் நீண்ட தூரப் பயணங்களில் ஈடுபடுவதையும் தற்காலிகமாகத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையர்கள் வெளியில் செல்லும்போது லெபனான் அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டின் நகலை எடுத்துச் செல்ல வேண்டும் என்று இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.
இதேவேளை இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள இலங்கை மக்களுக்கு தூதரகத்துடன் தொடர்பைப் பேணுவதற்கு தேவையான தொலைபேசி எண்களை வழங்கியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர (Arun Hemachandra) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.