முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மாகாண மட்ட ஆசிரியர் ஆட்சேர்ப்பில் முறைகேடு : நாடாளுமன்றில் சஜித் சுட்டிக்காட்டு

மாகாண மட்டத்தில் ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் குழப்பமான நிலை நிலவி வருகின்றதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

இன்று (9) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசாங்கம் நல்லதைச் செய்யச் சென்று குழப்பியதால் மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆட்சேர்ப்புகள் முறையாக முன்னெடுக்கப்படாத நிலை காணப்படுகின்றது.

பட்டதாரிகள் அதிருப்தி

மாகாண மட்டத்தில் இடம்பெறும் ஆட்சேர்ப்புகளை குழப்பமான முறையிலும் முறைசாரா முறையிலும் மேற்கொண்டு பட்டதாரிகளுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொள்ளப்பட்டுள்ளது.

மாகாண மட்ட ஆசிரியர் ஆட்சேர்ப்பில் முறைகேடு : நாடாளுமன்றில் சஜித் சுட்டிக்காட்டு | Irregularity Appointment Of Teachers For Graduates

முடிவுகளை வெளியிடாதது, நியமனம் என்ன அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்பதை வெளியிடாதது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. எல்லாம் கள்ளத்தனமாகவே நடந்து வருகிறது.

இந்த விடயத்தில் பட்டதாரிகள் அதிருப்தியடைந்துள்ளனர். இந்த விடயத்தில் உரிய தரப்பினர் பொறுப்புணர்வுடனும் நடந்து கொள்ள வேண்டும்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்

என்றாலும், ஆளுநர்கள் அவர்களது விருப்பத்தின்படி உள்ளூராட்சி மன்றங்களில் ஒவ்வொரு நபராக தமக்கு தேவையானவர்களுக்கு உரிய நியமணங்களை வழங்கும் நடவடிக்கைகளைச் சரியாகவே மேற்கொண்டு வருகின்றனர்.

மாகாண மட்ட ஆசிரியர் ஆட்சேர்ப்பில் முறைகேடு : நாடாளுமன்றில் சஜித் சுட்டிக்காட்டு | Irregularity Appointment Of Teachers For Graduates

வங்குரோத்து நாட்டில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறாத நிலையில், உள்ளூராட்சி மன்றங்களில் அரசியல் அடிவருடிகள் தனி அலுவலகங்களை வைத்து சட்டவிரோத நியமனங்களை வழங்கி வருகின்றனர்.

இந்த தவறுகளில் ஈடுபடவேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம். ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இந்த தவறுகளுக்கு பதில் சொல்ல வேண்டிவரும்.“ என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்