தமிழில் பிரபல தொகுப்பாளராகி இருப்பவர் டிடி. அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது என தெரியவேண்டியது இல்லை.
அவர் இதற்கு முன் அளித்த ஒரு பேட்டியில் “நான் ஒரு ஹீரோயினை பேட்டி எடுக்க இருந்தபோது அவரது உடையும் எனது உடையும் ஒரே மாதிரி இருந்தது, அதனால் என் உடையை மாற்றிக்கொள்ள கூறினார்” என தெரிவித்து இருந்தார்.

நயன்தாராவா?
டிடி அளித்த பேட்டிக்கு பிறகு நயன்தாரா தான் அந்த நடிகை என கிசுகிசுக்கப்பட்டது. நெட்டிசன்கள் இதற்காக நயன்தாராவை விமர்சித்தனர்.
இந்நிலையில் தற்போது டிடி அளித்த பேட்டியில் “ட்ரெஸ் மாத்த சொன்ன அந்த நடிகை நயன்தாரா என பலரும் விமர்சிக்கும்போது கஷ்டமாக இருக்கிறது. அது நயன்தாரா இல்லை” என கூறி இருக்கிறார்.


