சிறுத்தை சிவா
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் சிறுத்தை சிவா. வீரம், வேதாளம், விஸ்வாசம், சிறுத்தை என பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
ஆனால், கடைசியாக வெளிவந்த கங்குவா படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. மேலும் கடுமையான விமர்சனங்களை பெற்று தந்தது. கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கப்போகும் படம் என்ன ஹீரோ யார் என்பது குறித்து இதுவரை அறிவிப்பு வெளிவரவில்லை.
கவினை தொடர்ந்து பிரபல நடிகருடன் இணையும் ஜோடியாகும் ப்ரீத்தி முகுந்தன்.. முதல் முறையாக இணையும் ஜோடி
சமீபத்தில், விஜய் சேதுபதியை சிறுத்தை சிவா சந்தித்ததாகவும், இருவரும் இணைந்து படம் பண்ணப்போவதாகவும் திரை வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால், இதுகுறித்து தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை. இந்த நிலையில், தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகருமான சித்ரா லக்ஷ்மணன் இதுகுறித்து பேசியுள்ளார்.
விஜய் சேதுபதி தான் ஹீரோவா
இதில், விஜய் சேதுபதி சிறுத்தை சிவா இருவரும் பிரபல கோவிலுக்கு ஒன்றாக சென்றுள்ளனர். ஆனால், இருவரும் படம் பண்ணவில்லை. கோவிலுக்கு இருவரும் ஒன்றாக சென்றது குறித்து வெளிவந்த செய்தியை வைத்துக்கொண்டு, சிலர் தவறுதலாக தகவலை பரப்பி வருகிறார்கள். சிறுத்தை சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை என உறுதியாக கூறியுள்ளார்.
இதனை விஜய் சேதுபதிதான் தன்னிடம் கூறியதாகவும், சித்ரா லக்ஷ்மன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளியும் வைக்கப்பட்டுள்ளது.