கணேமுல்ல சஞ்சீவ கொலையில் மூளையாக செயற்பட்டவராக அடையாளம் காணப்பட்டுள்ள இஷார செவ்வந்தியின் சகோதரரின் வங்கிக் கணக்கில் கொலையை திட்டமிட்ட கெசல்பத்தர பத்மே என்ற நபர் ஒரு லட்சம் ரூபாயை வரவு வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த 19 ஆம் திகதி கணேமுல்ல சஞ்சீவ கொலை இடம்பெற்றதன் பின்னர் இந்த பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கொலைக்குப் பிறகு, சந்தேகபர் செவ்வந்தி, களுத்துறை நகரில் உள்ள ஒரு நகைக் கடையில் இருந்து 500,000 ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை வாங்கியிருப்பது தெரியவந்துள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
11 சந்தேக நபர்கள் கைது
இவ்வாறானதொரு பின்னணியில், இந்த கொலை வழக்கில் தேடப்படும் பிரதான சந்தேக நபர் செவ்வந்தியின் கைது செய்யப்பட்ட தாய் மற்றும் சகோதரரை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது, கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.