லெபனான்(lebanon) மீது பாரிய விமான தாக்குதலை தொடுத்த இஸ்ரேல்(Israel) படையினர் தற்போது தரைப்படை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
ஹிஸ்புல்லா தலைவரை விமான தாக்குதலில் கொன்ற இஸ்ரேல் படையினர் அந்த அமைப்பின் மீதமுள்ள உறுப்பினர்களையும் அழித்து தமது நாட்டின் வடக்கு பகுதியிலிருந்து வெளியேறிய மக்களை மீண்டும் குடியமர்த்துவதை நோக்கமாக கொண்டு இந்த படை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
முதல் இஸ்ரேலிய சிப்பாய் மரணம்
இவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ள தரைப்படை ஆக்கிரமிப்பிற்குப் பிறகு லெபனானுக்குள் முதல் இஸ்ரேலிய சிப்பாய் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதனன்று லெபனானுக்குள் கப்டன் எய்டன் யிட்சாக் ஓஸ்டர் (22)(Eitan Yitzhak Oster) கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF)வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரில்லா போரில் நிபுணத்துவம் பெற்ற குழு தளபதி
22 வயதான அவர் கொரில்லா போரில் நிபுணத்துவம் பெற்ற எலைட் கொமாண்டோ பிரிவான ஈகோஸ் பிரிவில் ஒரு குழு தளபதியாக இருந்தார் என்று இஸ்ரேலிய படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.