புதிய இணைப்பு
கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த அநாமதேய அழைப்பு தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கினிகத்தேன பகுதியில் வைத்து குறித்த நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், தான் அந்த அழைப்பை மேற்கொள்ளவில்லை என்றும் தன்னுடைய தொலைபேசி காணாமல் போயுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று காலை நீதிமன்ற வளாகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், அங்கிருந்தவர்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனர்.
எனினும், சோதனைகளின் பின்னர் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
கண்டி(Kandy) நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து அங்கு விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
119 பொலிஸ் அவசர இலகத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவ்வாறு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அப்புறப்படுத்தப்பட்ட மக்கள்
இதன் காரணமாக கண்டி நீதிமன்ற வளாகத்தில் இருந்து மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து தற்போது அங்கு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், பொலிஸ் அவசர இலக்கத்திற்கு இந்த தகவலை வழங்கியவர் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.