சுமந்திரன் மற்றும் சீவிகேவிற்கு தான் அனுப்பிய முக்கியமான குறுஞ்செய்திக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்.கொக்குவில் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று ஊடக சந்திப்பை நடத்தி அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, “கொள்கை ரீதியிலான இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்துவதற்காக ஒரு முக்கியமான பிரதி அறிக்கையை தயாரிக்க தீர்மானித்திருந்தோம்.
அந்த பிரதி அறிக்கையை நான் தனிப்பட்ட முறையில் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சுமந்திரனுக்கு வட்சப் செயலியில் அனுப்பி வைத்தேன்.
அதேபோன்று அக்கட்சியின் தலைவர் சீவிகே சிவஞானத்திற்கும் வட்சப் செயலியில் குறுஞ்செய்தியாக அனுப்பினேன்.
அந்த குறுஞ்செய்திகளின் screenshot களை நான் நகல் எடுத்து வைத்திருக்கின்றேன். அதற்கு அவர்கள் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,