ஜாக்கி ஜான்
ஆக்ஷன் காட்சிகளை டூப் போட்டு பல நடிகர்கள் நடிப்பார்கள். ஆனால், ஆக்ஷன் காட்சிகளில் தனது உயிரை பணயம் வைத்து நடிப்பதில் இவரை மிஞ்ச வேறு யாருமே இல்லை. அந்த அளவிற்கு உயிரை கொடுத்து நடிப்பவர் தான் ஜாக்கி ஜான்.
இவருடைய சண்டை காட்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற முக்கிய காரணமாக இருந்தது நகைச்சுவையும் தான். ஆம், சீரியஸான சண்டை காட்சிகளில் கூட, எதிரியை கிண்டல் செய்யும் வகையில் நகைச்சுவையாக நடித்திருப்பார். இது குழந்தைகளை மட்டுமின்றி அனைவரையும் கவர்ந்தது.
90ஸ் கிட்ஸ்-ன் இன்ஸபிரேஷன், இவருடைய படங்கள் தி கராத்தே கிட், ரஷ் ஹவர், டிரங்கன் மாஸ்டர், Rob-B-Hood, போலீஸ் ஸ்டோரி என பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவருடைய படங்கள் மட்டுமின்றி கார்ட்டூன்ஸ் கூட பலருடைய மனதை கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோட் படத்திற்கு பின் வெங்கட் பிரபு என்ன செய்கிறார்.. யாருடன் கைகோர்க்கப்போகிறார் தெரியுமா, இதோ
ஜாக்கி ஜான் நடிப்பில் அடுத்ததாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் தி கரேத்தே கிட் லெஜண்ட்ஸ். இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
லேட்டஸ்ட் புகைப்படம்
இந்த நிலையில் 70 வயதாகியுள்ள நடிகர் ஜாக்கி ஜானின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும், நம்ம ஜாக்கி ஜானா இது என கேட்டு வருகிறார்கள். அந்த அளவிற்கு ஆளே மாறியுள்ளார். இதோ நீங்களே பாருங்க..