யாழ்ப்பாணத்தை(Jaffna) சேர்ந்த சிறுவன் ஒருவர் முல்லைத்தீவு பகுதியிலுள்ள நீர் நிலை ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன், முல்லைத்தீவு – வற்றாப்பளை பகுதியில் இருந்து இன்று(26) மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், “யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவிலுள்ள உறவினர் வீட்டுக்கு வருகை தந்த 16 வயதுடைய சிறுவன் நேற்று(25) காணாமல் போயுள்ளார்.
காவல்துறை விசாரணை
இந்நிலையில், உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் இன்று(26) அப்பகுதியிலுள்ள நீர் நிலை ஒன்றில் இருந்து சிறுவன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த சிறுவனின் மரணம் கொலையா அல்லது விபத்தா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.