யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் (Jaffna International Airport) நேற்று (18) இந்தியாவின் சென்னையில் இருந்து வந்த
முதல் அட்டவணையற்ற சர்வதேச விமானத்தை (சார்ட்டர்) வரவேற்றதன் மூலம் ஒரு
வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்த சாதனை, பிராந்திய விமான இணைப்பை மேம்படுத்துவதாகவும், வடக்கு இலங்கைக்கான
சர்வதேச பயணத்தை அதிகரிப்பதற்கும் வழி வகுக்கும் என்றும் விமான நிலையம்
மற்றும் விமான சேவைகள் தெரிவித்துள்ளது.
பிராந்திய சுற்றுலா
இந்த வெற்றிகரமான வருகையுடன், யாழ்ப்பாணம் விமான நிலையம், இப்போது சர்வதேச
சார்ட்டர் விமானங்களுக்கு அதிகார பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.
இது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்து, பிராந்திய சுற்றுலாவை மேம்படுத்தும்
என்றும். விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தனியார் லிமிடெட்
தெரிவித்துள்ளது.