யாழ்ப்பாணம்(Jaffna) – சுன்னாகப் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்படவுள்ள உயர் மின்னழுத்த மின்சாரம்
இலங்கை மின்சார சபை சட்ட விதிகளுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்படுவதாக இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் போது குறித்த விவகாரம் தொடர்பில்
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“குறித்த தனியார் நிறுவனம் தமது தொழில் துறை ஒன்றை ஆரம்பிப்பதற்கு உயர் மின்னழுத்த மின்சாரத்தை பெறுவதற்காக இலங்கை மின்சார சபையிடம் விண்ணப்பித்தது.
அதன் பிரகாரம் அப்போது மக்களின் 80 வீதமானவர்களின் கையெழுத்துடன் உரிய ஆவணங்களை உரிய ஆவணங்களை பரிசோதித்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் சில நபர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக மின் இணைப்பை வழங்குவதற்கு இடையூறு விளைவிக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகள்,
https://www.youtube.com/embed/bMbBS0Q7Z4E