வடக்கு கிழக்கில் உறவுகளுக்கு என்ன நடந்தது என உறவுகள் ஏங்கி கொண்டிருக்கும்
நிலையில் அதற்கான நீதி சர்வதேச மட்டத்தில் தடையாக அமைவதாக வடக்கு கிழக்கு
வலிந்து காணாமலாக்கபட்ட சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா
குற்றம்சாட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை அண்மையில் யாழ் மாவட்டத்திற்கு வருகை தந்த சீன தூதுவர் தமிழ் மக்களின் தீர்வு
மற்றும் காணமாலாக்கபட்டோர் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு
சீனதூதுவர் வழங்கிய பதில் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே
அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “உண்மையாகவே சீனதூதுவரின் வருகையின் பொழுதான கருத்திற்கு முற்றாக எதிர்ப்பை
தெரிவிக்கின்றேன்.
சீனதூதுவரின் வருகை
தேசிய மக்கள் சக்திக்கு வாக்கு வீழ்ந்தது உண்மை ஏற்கனவே
முன்பிருந்த அரச சார்பான கட்சிக்கு வீழ்ந்தவை தான் இப்பொழுது தேசிய மக்கள்
சக்திக்கு வீழ்ந்துள்ளது.
மேலும் இந்த அநுர குமார திஸாநாயக்க அரசாங்கத்தினை முற்று முழுதாக ஏற்றுகொண்டு வாக்களித்தது என்றும் கூறமுடியாது.
இங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெறுப்பும் அங்கே வாக்காக
விழுந்துள்ளது அதனை விட வழக்கமாக இங்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
எடுத்து கொண்ட வாக்கை விட அதிகளவு வாக்கினை பெற்றுள்ளார்கள்.
சர்வதேச குற்றவியல்
ஆடு நனையிது என ஓநாய் வெம்பி அழுத கதை தான் சீனதூதுவரின் கதை மீது எனக்கு
வருகின்றது உண்மையாகவே
இந்த காணாமலாக்காபட்டவரின் பிரச்சினைக்கு எப்பொழுதோ தீர்வு கிடைத்திருக்கும்.
கடந்த அரசாங்கங்கள் இருக்கின்ற பொழுது அதனை சர்வதேச நீதிமன்றத்திற்கு
கொடுப்பதற்கு பல நாடுகள் தயாராக இருந்தும் சீனாக்கு அங்குள்ள வீற்றோ பவர்
காரணமாக தான் இந்த விடயம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு
கொண்டுபோகபடவில்லை.
ஏன் என்றால் வெளிப்படையாகவே சொல்லுகின்றார்கள் காணாமலாக்கபட்டவரின் பிரச்சினையை கொண்டு சென்றால் சீனா இலங்கைக்கு ஆதரவாக
வீற்றோ அதிகாரத்தை பாவிக்கும் என்கின்றார்கள்.
அதே போல இறுதி கட்ட யுத்தத்தின் பொழுதும் சீனா பொஸ்பரஸ் குண்டுகளை கொடுத்து தமிழ் மக்களை கொல்வதற்கு முக்கால்வாசி அவர்கள் தான் பொறுப்பாளிகள்
யுத்தம் முடிவடைந்து தீர்வு காலத்துக்கு காலம் வரும் முட்டு கொடுத்து தங்கள் நலனை தக்க வைப்பதற்காக தங்கள் சுயலாபத்தினை பெறுவதற்கும் தமிழ்மக்களை வஞ்சித்து கொண்ட இருக்கின்றார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.