யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும்( Ramanathan Archchuna), யாழ். போதனா வைத்தியசாலையின் (Teaching Hospital Jaffna) பணிப்பாளர் த.சத்தியமூர்த்திக்கும் (T.Sathiyamoorthy) இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
யாழ்.யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று (17) இடம்பெற்று வரும் நிலையில் குறித்த வாக்குவாதம் வலுத்துள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி,
“யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் பங்கேற்பவர்களை கண்ணியமாக நடத்த வேண்டும். நோயாளிகளாக உருவாக்க வேண்டாம்.
குறுக்கிட்ட அர்ச்சுனா
இங்கு வருபவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கலாம், அமைச்சர்களாக இருக்கலாம். ஆனால் உயர் அதிகாரிகளுக்கு மதிப்பளிப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
கூட்டத்திற்கு வந்து கூச்சலிடுவதால், அதிகமாக சத்தமிடுவதால் இதய ரீதியான தாக்கங்கள் இடம்பெறும்.
இதனால் அமைதியான முறையில் கூட்டத்தை நடத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.
இதன்போது குறுக்கிட்ட இராமநாதன் அர்ச்சுனா, கேள்விகள் கேட்க்கப்பட்டால் அதற்கான பதிலை வழங்குமாறும், கேட்கவேண்டிய கேள்விகளை உரிய சந்தர்ப்பத்தில் கேட்டாக வேண்டும் என கூறியுள்ளார்.
கூட்டத்தில் பங்கேற்றவர்கள்
யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அதன் தலைவரும்
அமைச்சருமான சந்திரசேகரன் தலைமையில் இணைத்தலைவரும் வடக்கு மாகாண ஆளுநருமான
வேதநாயகனின் பங்கேற்புடன் இன்று ( 17.07.2025) காலை 9.00 மணியளவில் யாழ் மாவட்ட
செயலகத்தில் ஆரம்பமானது.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள் பொது
அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இக்கூட்டத்தில் வீதி அவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் சுத்திகரிப்பு,
போக்குவரத்து, மின்சாரம், வீடமைப்பு, சட்டம் ஒழுங்கு, கடற்றொழில், விவசாயம்
உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.