முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ். இந்துக் கல்லூரியின் சாதனை – சிறப்பு சித்தி பெற்று அசத்திய இரட்டை சகோதரர்கள்

புதிய இணைப்பு

நேற்றையதினம் வெளியாகிய 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி
55 3 ஏ சித்திகளையும், 55 2 ஏ சித்திகளையும், 19 ஏ 2பி சித்திகளையும் பெற்று
யாழ். இந்துக் கல்லூரி சாதனை படைத்துள்ளது

பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ். இந்துக் கல்லூரியை சேர்ந்த மாணவர்களான சி.ஜமுனானந்தா பிரணவன் (முதலாம் இடம்) மற்றும் சி.ஜமுனானந்தா சரவணன் (இரண்டாம் இடம்) ஆகிய இரட்டை சகோதரர்கள் மாவட்ட மட்டத்தில் முதல் இரு இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அத்துடன், விஞ்ஞான பிரிவில் 22 பேர் 3A சித்திகளையும் 13 பேர் 2A சித்திகளையும் 06 பேர் A2B சித்திகளையும் பெற்றுள்ளனர்.

உயர்தர பரீட்சை பெறுபேறுகள்

பௌதீக விஞ்ஞான பிரிவில் 27 பேர் 3A சித்திகளையும் 16 பேர் 2A சித்திகளையும் 11 பேர் A2B சித்திகளையும் அடைந்துள்ளனர்.

யாழ். இந்துக் கல்லூரியின் சாதனை - சிறப்பு சித்தி பெற்று அசத்திய இரட்டை சகோதரர்கள் | Jaffna District 2024 Al Exam Best Results

மேலும், வணிகப்பிரிவில் ஒருவர் 3A சித்திகளையும் 2 பேர் 2A சித்திகளையும் 2 பேர் A2B சித்திகளையும் பெற்றுள்ளனர். கலைப்பிரிவில் 02 பேர் 2A சித்திகளை அடைந்துள்ளனர்.  

இதேவேளை, உயிரியல் தொழிநுட்பப் ( B-Tech) பிரிவிலும் இயந்திரவியல் தொழினுட்ப (E-Tech) பிரிவிலும் தலா ஒருவர் 3A சித்திகளை பெற்றுள்ளனர்.   

செய்திகள் – கஜிந்தன்

முதலாம் இணைப்பு 

2024 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ்.இந்துக் கல்லூரியை சேர்ந்த மாணவர்களான இரட்டை சகோதரர்கள் மாவட்ட மட்டத்தில் முதல் இரு இடங்களை பெற்றுள்ளனர்.

அத்தோடு, அதே இரு சகோரர்கள் தேசிய மட்டத்தில் 3ஆம் மற்றும் 5ஆம் இடங்களை பெற்றுள்ளனர்.

யாழ். இந்துக் கல்லூரியின் சாதனை - சிறப்பு சித்தி பெற்று அசத்திய இரட்டை சகோதரர்கள் | Jaffna District 2024 Al Exam Best Results

சி.ஜமுனானந்தா பிரணவன் (முதலாம் இடம்) மற்றும் சி.ஜமுனானந்தா சரவணன் (இரண்டாம் இடம்) ஆகிய இரு சகோதரர்களே இவ்வாறு உயர்தரத்தில் சாதனை படைத்துள்ளனர்.

இதேவேளை, குறித்த மாணவர்களின் தந்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரதிப் பணிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழ். இந்துக் கல்லூரியின் சாதனை - சிறப்பு சித்தி பெற்று அசத்திய இரட்டை சகோதரர்கள் | Jaffna District 2024 Al Exam Best Results

யாழ். இந்துக் கல்லூரியின் சாதனை - சிறப்பு சித்தி பெற்று அசத்திய இரட்டை சகோதரர்கள் | Jaffna District 2024 Al Exam Best Results

https://www.youtube.com/embed/T4CbXjy4WSA

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்