சாவகச்சேரி வைத்தியசாலை (Chavakachcheri Hospital) விவகாரம் பேசுபொருளாகியுள்ள நிலையில், வைத்தியர் அர்ச்சுனா மீது குற்றச்சாட்டை முன்வைத்த சாவகச்சேரி ஆதார வைத்திய சாலை நலம்புரி சங்கம் வெளியிட்டுள்ள கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பொதுமக்களால் கடுமையாக விமர்சிக்கப்படும் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரனை தமது சங்கத்தின் போசகர்களில் ஒருவராக வைத்துக் கொண்டு அர்ச்சுனா மீது குற்றச்சாட்டை கூறுவது தான் வேடிக்கை என மக்கள் சமூக ஊடங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அத்துடன் தற்போது அந்த வைத்தியசாலைக்கு புதிய அத்தியகட்சரை நியமித்துள்ளமையானது தென்மராட்சி மக்களின் போராட்டத்திற்கு செய்த துரோகம் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நடவடிக்கைகளின் பின்னணியில் மத்திய அரசும் ஆறுமுகம் கேதீஸ்வரன் போன்றவர்கள் உள்ளதாக பொதுமக்கள் கடுமையான சமூகவலைதளங்களில் கடுமையாக சாடி வருகின்றனர்.
போதை மாத்திரை விற்பனை
இதேவேளை, போதை மாத்திரைகளை மருத்துவர் கேதீஸ்வரன் விற்பனை செய்ததாக மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.
அப்படி ஒரு சம்பவம் நடந்தால் அது பகிரங்கமாக விசாரிக்கப்படவேண்டும். எனவே மருத்துவர் கேதீஸ்வரன் அதற்கான முறைப்பாட்டை செய்து உரிய முறையிலே சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என சிவஞானம் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், வைத்தியர் அர்ச்சுனா வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்ற நிலையில் குற்றச்சாட்டுக்கு இலக்காக இருக்கும் கேதீஸ்வரன் அங்கம் வகிக்கும் நலன்புரிச் சங்கம் நீதியான சங்கமா என பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளமை சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்துயுள்ளது.
https://www.youtube.com/embed/ZX3YbfAjAS0