கனடாவில் (Canada) தமிழினப் பற்றாளரும் கனேடியத் தமிழ் வானொலி, பத்திரிகைத் துறையின் முன்னோடி பிரபல சமூக சேவையாளருமான குலத்துங்கம் மதிசூடி என்ற ஈழத்தமிழர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 40 ஆண்டுகளாக கனடாவில் வாழ்ந்து வந்த அவர் யாழ்ப்பாணம் (Jaffna) அரியாலையைச் சேர்ந்தவராவார்.
குறித்த சம்பவம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த நபர் ஆண்டுக்கு ஒருமுறை காரைதீவு வந்து செல்வதுடன் அம்பாறை மாவட்டத்தில் பல சமூக செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளார்.
மனநிலை பாதிக்கப்பட்டவர்
உயிரிழந்த நபருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ள நிலையில் அவரது மகன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், சம்பவ தினத்தன்று இரவு தாயை ஒரு அறையில் பூட்டிவிட்டு தந்தையைக் கத்தியால் குத்தி கொலை செய்திருப்பதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதையடுத்து, உடனடியாகக் கனடா காவல்துறையினர் சந்தேக நபரை கைது செய்து காவலியில் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், கனேடிய ஊடகங்கள் இந்தச் சம்பவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து தகவலை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.