இலங்கை தமிழர்களுக்கு மட்டுமன்றி வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கும் நல்லூரானை தரிசிப்பது வாழ்நாள் ஆசையாகவே காணப்படுகின்றது.
நல்லூர் முருகனின் அருளும் அந்த ஆலயத்தின் அமைப்பும் பிரமாண்டமும் அனைவராலும் போற்றப்படும் அம்சங்களாகும்.
கடந்த மாதம் கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் திருவிழாவின் 15 ஆம் நாள் பூஜை இன்றையதினம் நடைபெற்றது.
இந்த திருவிழா காலத்தில் இலங்கையின் பல பாகங்களை சேர்ந்தவர்களும் வெளி நாடுகளை சேர்ந்தவர்களும் நல்லூர் முருகனை தரிசிக்க ஆலயத்திற்கு படையெடுத்துள்ளனர்.
இந்நிலையில் தமது வாழ்நாள் ஆசைகள் பற்றியும் நல்லூர் கந்தனின் மகிமை பற்றியும் பக்தர்கள் கூறிய கருத்துக்களை இந்த காணொளியில் காணலாம்…,

