உலகம் முழுவது உள்ள தமிழர்கள் நாளைய தினம் பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில்(Jaffna) மக்கள் பொங்கலை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
அந்த வகையில், யாழ்ப்பாணத்தில் மண் பானை தயாரிப்பு, விற்பனை மற்றும் பொங்கல் வியாபாரம் என்பன அமோகமாக இடம்பெற்று வருகிறது.
இதேவேளை, மன்னார் மாவட்டத்திலும் பொங்கல் கொண்டாட்டங்களுக்கான பொருட்கொள்வனவில் மக்கள்
ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பொங்கல் கொண்டாட்டங்கள்
குறிப்பாக நாளையதினம்(14) பொங்கல் கொண்டாட்டங்களை மேற்கொள்வதற்கான உணவு பொருட்கள்
பானை கரும்பு உள்ளடங்கலான பொருட்களை மக்கள் ஆர்வத்தோடு கொள்வனவு செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில தினங்களாக மன்னார் மாவட்டத்தில் சீரற்ற காலநிலை நிலவி வருகின்ற
போதிலும் மக்கள் தை திருநாளை கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்றனர்.
அத்துடன், கிளிநொச்சி மக்களும் பொங்கலை கொண்டாட தயாராகி வருவதுடன் பொருட்கொள்வனவிலும், புத்தாடை, பழங்கள், கரும்பு உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்வதிலும்
அவர்கள் ஆர்வம்காட்டி வருகின்றனர்.
மேலும், வர்த்தக நடவடிக்கைகள் வழமைக்கு மாறாக அதிகம் இடம்பெற்றதாகவும், பிரத்தியேகமான
இடங்களிலும், வீதியோர வியாபாரங்களும் இடம்பெற்றுள்ளன.