வடக்கு தொடருந்து மார்க்கத்தின் கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான தொடருந்து சேவைகள்
இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டையில் இன்று (28) அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்ட யாழ்தேவி
புகையிரதம் மதியம் ஒரு மணியளவில் யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளது.
நவீன மயமாக்கல் பணிகள்
நாளை (29) காங்கேசன்துறையில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு 10.53
இற்கு யாழ்ப்பாணம் பிரதான தொடருந்து நிலையத்தை வந்தடைந்து 11 மணிக்கு கொழும்பு
நோக்கி புறப்படும்.
மஹவ மற்றும் அநுராதபுரம் இடையிலான புகையிரத மார்க்கத்தின் நவீன மயமாக்கல்
பணிகள் நிறைவடைந்த நிலையில், வடக்கு புகையிரத சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.