முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் இறுதி ஊர்வலத்தில் ஈடுபட்டவர்களை மோதிய வாகனம் மீட்பு

யாழில்(Jaffna) இறுதி ஊர்வலத்தில் ஈடுபட்டவர்கள் மீது விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும்
புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனமானது கைதடி – தச்சன்தோப்பு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்,
கோப்பாய் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

காவல்துறை விசாரணை

சம்பவம் குறித்து தெரியவருகையில், கடந்த 21ஆம் திகதி கோப்பாய் – கைதடி வீதியில் உள்ள இந்து மயானத்திற்கு பூதவுடலை எடுத்து சென்றவர்கள் மீது வாகனம் மோதியதில் அறுவர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்த ஆறு பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழில் இறுதி ஊர்வலத்தில் ஈடுபட்டவர்களை மோதிய வாகனம் மீட்பு | Jaffna Road Accident Vehicle Was Found

இதேவேளை, அந்த வாகனத்தை செலுத்தியவரும், வாகனத்தின் உரிமையாளரும் கைது
செய்யப்படவில்லை என்பதுடன் வாகனத்தின் உரிமையாளர் கொழும்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில்,  காவல்துறையினர் வாகனத்தின் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்