விஞ்ஞான புனைகதை எழுதுவதில் தேசிய ரீதியில் முதல் மூன்று இடங்களையும் யாழ்.மாணவர்கள் பெற்றுள்ளனர்.
விஞ்ஞானத்தை பிரபல்யப்படுத்தும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் தேசிய விஞ்ஞான
மன்றானது உலக விஞ்ஞான தினத்தையும், விஞ்ஞானம் தொடர்பான போட்டிகளில் தேசிய
ரீதியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு வைபவத்தையும் கொழும்பு
பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடாத்தியது.
குறித்த நிகழ்வானது நேற்று(04.11.2025) நடைபெற்றது.
முதல் மூன்று இடங்களையும்
இதில் விஞ்ஞான புனைகதை எழுதுவதில் முதலாம் இடத்தை வேம்படி மகளிர் உயர்தர
பாடசாலையை சேர்ந்த ரூபிகா அருந்தவமும், இரண்டாம் இடத்தை சாவச்சேரி இந்து
கல்லூரியைச் சேர்ந்த கேசிகா தயாகுமாரனும், மூன்றாம் இடத்தினை யாழ்ப்பாணம்
இந்து மகளிர் கல்லூரியைச் சேர்ந்த அட்சயா ஞானசந்திரனும் பெற்றுக்கொண்டனர்.

தேசிய விஞ்ஞான மன்றத்தின் தலைவர் கலாநிதி சுடத் சமரவீர தலைமையில் இடம்பெற்ற
இந்த நிகழ்வில் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிருஷாந்த அபேசேன
பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தும் இருந்தார்.



