யாழ் போதனா வைத்தியசாலையென்பது அண்மைய நாட்களாக உலக தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய பேசுபொருளாகி வருகின்றது.
எதிர்மறையான கருத்துக்கள் பல வலம் வந்து யாழ் மக்களின் உயிர்காக்கும் அந்த மையம் பற்றிய நம்பிக்கையினை கேள்விக்குறியாக்கியுள்ளது.
18ஆம் நூற்றாண்டிலிருந்து நம் நிலத்தில் ஆரம்பித்த ஆங்கில பாரம்பரியத்தின் தொடர்ச்சி என வட மாகாணம் முழுதுவதுமின்றி நாடு முழுவதிலும் இருந்து தேடி வருகின்ற மக்களின் பிணிதீர்க்கும் நிலையமாக விளங்கி வருகின்ற யாழ் போதனா வைத்தியசாலை என்றுமில்லாதவாறு ஏன் தற்போழுது அதிக விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றது.
யாழ் போதனா வைத்தியசாலையின் உண்மையான நிலை என்ன?
அங்கு செல்கின்ற மக்கள் எப்படி நடத்தப்படுகின்றார்கள்?
யாழ் போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர்களின் மனநிலை எவ்வாறு இருக்கின்றது?
நாட்டின் ஏனைய வைத்தியசாலைகள் போல இங்கும் சேவைகள் வழங்கப்படுகின்றனவா?வைத்தியசாலையில் நடைபெறும் முறைகேடுகளுக்கு மக்கள் எவ்வாறு தீர்வை பெற்றுக்ககொள்ளுவது?
அங்கு செல்லுகின்ற நோயாளர்கள் தமது சவால்களை பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள் என்ன?
இவ்வாறான பல வினாக்களுக்கு விடைத்தேடி வைத்தியசாலைக்குள் நுழைந்துள்ளது ஐபிசி தமிழ் குழு..
இது தொடர்பான முழுமையான விபரங்களை கீழுள்ள காணொளியில் காணலாம்..