இலங்கையில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் வரலாற்று சிறப்பு வாய்ந்த நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழாவானது இன்று (01) மிகவும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இதன்படி கடந்த 09ஆம் திகதி (09.08.2023) நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருக்கிறது.
நாளை தீர்த்தோற்சவம் மற்றும் கொடியிறக்கத்துடன் நிறைவு காணவிருக்கிறது.
பூங்காவனம்
இந்நிலையில், இன்றைய தேர்த்திருவிழாவில் ஆறுமுகப் பெருமான் கஜாவல்லி, மஹாவல்லி சமேத ஸ்ரீ சண்முகப் பெருமானாக எழுந்தருவது வழமை.
மகோற்சவ தினங்களில் அருளொளி வீசும் கம்பீரமான தோற்றத்துடனும், எல்லையில்லாக் கொள்ளை அழகு தரிசனமும் நல்லூரானின் சிறப்பாகும்.
மேலும், நல்லூரானின் பூங்காவனம் நாளை மறுதினம் (03) மாலையும், வைரவர் உற்சவம் 04ஆம் திகதியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.