முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றையதினம் (12) யாழ்.
பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வரலாற்றினை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் நோக்கில் இந்த உப்பில்லாத
முள்ளிவாய்க்கால் கஞ்சியானது யாழ். வல்வெட்டித்துறை பகுதியில் காய்ச்சி
வழங்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தமிழர் தாயகம் எங்கும்
முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரித்து வழங்கும் செயற்பாட்டில் யாழ். பல்கலைக்கழக
மாணவர்கள் ஈடுபடவுள்ளனர்.
இரத்ததான நிகழ்வு
அத்துடன் எதிர்வரும் புதன்கிழமை 14ஆம் திகதி
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கட்டட தொகுதியில் மாபெரும் இரத்ததான நிகழ்வு
ஒன்றினையும் பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

மேலும் முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்கள் அனுபவித்த துயரங்களை
எடுத்துக்காட்டும் முகமாக பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் கண்காட்சி
ஒன்றினையும் பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
தையிட்டி விகாரை
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் தையிட்டி விகாரை முன்பாக
முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று (12) வழங்கப்பட்டது.
இதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சி
உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தையிட்டி விகாரைக்கு முன்பாக பதாதைகளைத் தாங்கியவாறி போராட்டத்தினையும்
விகாரைக்கு எதிரான போராட்டத்தையும் முன்னெடுத்திருந்தனர்.
செய்தி-தீபன்




