மக்களுடைய நம்பிக்கைக்கு காத்திரமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இதுவரை நடந்து கொள்ளவில்லை என வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ. சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் நெற்றிக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ‘வலிகாமம் வடக்கிலே 2013ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் திகதி 6,376 ஏக்கர் நிலப்பகுதியை உயர்பாதுகாப்பு வலயமாகவும் இராணுவத்தினரின் தேவைக்கு பயன்படுத்துவதற்காகவும் 24 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கியதாக அந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கு எதிராக வலிகாமம் வடக்கு பிரதேச ஊடாக வழக்குகள் நடைபெற்ற வருகின்ற நிலையில் இன்று வரை 3,300 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
இன்னும் 2,500 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் விடுவிக்கப்படவுள்ள நிலையில் தையிட்டி தெற்கிலே பொதுமக்களின் காணியிலே சட்டவிரோத விகாரை அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆட்சிக்கு வந்த அநுரகுமார அரசாங்கம் மக்களின் வடக்கில் உள்ள காணிகள் விடுவிக்கப்படும் என பொய்யான வாக்குறுதியை வழங்கி வாக்குகளைப் பெற்றிருந்தார்கள்.
அநுரகுமார திசாநாயக்கவை நம்பி மக்கள் வாக்களித்த நிலையில் இன்று ஆட்சிக்கு வந்த ஒரு வருட காலம் நிறைவடைந்தும் அந்தக் காணிகள் விடுவிக்கப்படவில்லை“ என தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/embed/i9uOKA0UvT4

