ஜப்பானுடனான வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக, இலங்கை அரசாங்கம், ‘ஜெய்க்கா’ என்ற ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் பரிமாற்ற ஆவணங்களிலும் திருத்தப்பட்ட ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவுள்ளது.
இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மற்றும் அதிகாரப்பூர்வ கடன் வழங்குநர் குழுவுடனான கலந்துரையாடல்களை தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார் .
இந்தநிலையில், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராக, ஜனாதிபதியின் முன்மொழிவின் அடிப்படையில், சட்டமா அதிபர், இதற்குரிய தேவையான ஆவணங்களை அங்கீகரித்துள்ளார்.

அமைச்சரவை ஒப்புதல்
அத்துடன் அமைச்சரவையும் இந்த உடன்படிக்கையில் கையொப்பமிடுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

