இஸ்ரேலில் வீட்டு தாதியர் துறையில் 2,149 இலங்கை தாதியர் நிபுணர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 2025 முதல் 259 இலங்கையர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் பணியகம் கூறியுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் 28 ஆம் திகதி இஸ்ரேலுக்கு பயணிக்க திட்டமிடப்பட்டிருந்த 07 பெண்களுக்கு விமான டிக்கெட்டுகள் வழங்கும் நிகழ்வு இன்று (25) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நடைபெற்றது.
வேலைவாய்ப்புகள்
அத்துடன், இஸ்ரேலில் ஹோட்டல் ஹவுஸ் கீப்பிங் மற்றும் துப்புரவுத் துறையில் வேலைவாய்ப்பு பெற்ற 77 வேலை தேடுபவர்களுக்கு விமான டிக்கெட்டுகள் வழங்கும் நிகழ்வும் பணியகத்தின் தவிசாளர் கோசல விக்ரமசிங்கவின் தலைமையில் அண்மையில் பணியகத்தில் நடைபெற்றது.
அவர்களில் 28 பேர் ஏப்ரல் 28 ஆம் திகதியிலும் 49 பேர் ஏப்ரல் 29 ஆம் திகதியிலும் இஸ்ரேலுக்குப் புறப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தக் குழுவுடன் சேர்ந்து, 180 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் ஹோட்டல், வீட்டு பராமரிப்பு மற்றும் துப்புரவுத் துறையில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் கூறப்படுகிறது.