உலக அளவில் புகழ்பெற்ற நடிகராக இருப்பவர் ஜான் சீனா. WWE மூலமாக பிரபலம் ஆகி அதன் பிறகு ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் ஜான் சீனா கடந்த வருடம் ஆஸ்கார் விழாவில் நிர்வாணமாக தோன்றியது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
மேலும் ஜான் சீனா அடுத்த வருடம் WWEயில் இருந்து ஓய்வு பெறப்போவதாகவும் அறிவித்து இருக்கிறார். அதனால் அவரது ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர்.

ஷாருக் கான் பற்றி பதிவு
ஜான் சீனா நேற்று மும்பையில் அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்தியா வந்திருந்தார். அவர் இந்திய உடையில் வந்திருந்த வீடியோவும் வைரல் ஆகி இருந்தது.
அங்கு ஹிந்தி நடிகர் ஷாருக் கான் உடன் எடுத்த போட்டோவை X தளத்தில் பதிவிட்டு இருக்கும் ஜான் சீனா அவரிடம் பேசியது மறக்க முடியாத ஒன்று என கூறி இருக்கிறார்.
அவரால் என் வாழ்க்கையில் பாசிட்டிவான விளைவுகள் இருந்தது என அவரிடமே சொன்னேன் எனவும் ஜான் சீனா கூறி இருக்கிறார்.
Source: https://cineulagam.com/article/john-cena-tweets-about-shah-rukh-khan-1720895128

