முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தல் சம்பவம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

புதிய இணைப்பு

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் இருவரும் நேற்று(01) கைது செய்யப்பட்டிருந்த நிலையில் கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

முதலாம் இணைப்பு

கடந்த 2008ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் இருவரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் கீத் நொயார் 2008ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி தெஹிவளை பகுதியில் கடத்தப்பட்டதுடன் அவர் மீது கடுமையான தாக்குதலும் நடத்தப்பட்டது.

கைது நடவடிக்கை

இந்த சம்பவத்துடத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் நேற்று (01) குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் நவகத்தேகம மற்றும் எலயபத்துவ காவல்துறை பிரிவுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தல் சம்பவம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Journalist Keith Noyahr Kidnapping Two Arrested

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 42 மற்றும் 46 வயதுடைய நவகத்தேகம மற்றும் உலுக்குளம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ புலனாய்வுப் பணியாளர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணை

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தல் சம்பவம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Journalist Keith Noyahr Kidnapping Two Arrested

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் 2018ஆம் ஆண்டு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.

அத்துடன் 2017ஆம் ஆண்டு இந்த சம்பவம் தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவின் 5 பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.