முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஊடகவியலாளரை மிரட்டி சரமாரியாக தாக்கி உயிர் அச்சுறுத்தல்: அரசியல் கும்பலின் வெறிச்செயல்

அம்பாறையில் ஊடகவியலாளர் ஒருவர் மீது குழுவொன்றியால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் யூ.எல்.மப்றூக் மீது என்பவர் மீது நேற்று (02) அட்டாளைச்சேனை பொது
மைதானத்துக்கு அருகில் குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின்
அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் றியா மசூர் என்பவர் தலைமையிலான ஒரு குழுவினர் மேற்கொண்டதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையில் முறைப்பாடு 

சமபவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தனது நண்பர்களுடன் ஊடகவியலாளர் மப்றூக் நேற்றிரவு அட்டாளைச்சேனை பொது
மைதானத்துக்கு அருகில் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

ஊடகவியலாளரை மிரட்டி சரமாரியாக தாக்கி உயிர் அச்சுறுத்தல்: அரசியல் கும்பலின் வெறிச்செயல் | Journalist Mabrook Attacked By Slmc Member

இதன்போதுஅங்கு காரில் வந்த
அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் றியா என்பவர் மற்றும் இன்னுமிருவரும் மப்றூக்
மீது எதிர்பாராத விதமாக தாக்குதல் நடத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

போதைவஸ்து பாவனை

“என்னைப் பற்றி எப்படி நீ செய்தி எழுதுவாய்” எனக் கேட்டவாறே மப்றூக் மீது
றியா மசூர் என்பவர் தாக்குதல் நடத்தியதாக தனது காவல்துறை முறைப்பாட்டில்
ஊடகவியலாளர் மப்றூக் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளரை மிரட்டி சரமாரியாக தாக்கி உயிர் அச்சுறுத்தல்: அரசியல் கும்பலின் வெறிச்செயல் | Journalist Mabrook Attacked By Slmc Member

றியா மசூர் மற்றும் அவருடன் வந்தவர்கள் மது
அருந்தியிருந்ததாகவும் காவல்துறை முறைப்பாட்டில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

றியா மசூர் அழைத்து வந்த குழுவினருக்கு எதிராக, ஏற்கனவே பொதுமக்களைத்
தாக்கியமை மற்றும் போதைவஸ்து பாவனை உள்ளிட்ட பல்வேறு முறைப்பாடுகள்
உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிர் அச்சுறுத்தல் 

இந்தநிலையில், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் உள்ளிட்ட தனது
நண்பர்களுடன் ஊடகவியலாளர் பேசிக் கொண்டிருந்த வேளையிலேயே இந்தத் தாக்குதல்
நடந்துள்ளது.

ஊடகவியலாளரை மிரட்டி சரமாரியாக தாக்கி உயிர் அச்சுறுத்தல்: அரசியல் கும்பலின் வெறிச்செயல் | Journalist Mabrook Attacked By Slmc Member

இதன்போது அங்கிருந்தவர்கள் தாக்குதலை தடுத்து நிறுத்தியதாகவும், இல்லா
விட்டால் ஊடகவியலாளருக்கு உயிராபத்து
ஏற்படுத்தியிருக்கக் கூடும் எனவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள்
குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் தாக்குதலை மேற்கொண்ட றியா மசூர் என்பவர், தனக்கு உயிர் அச்சுறுத்தல்
விடுத்து விட்டுச் சென்றதாகவும், ஊடகவியலாளர் மப்றூக் தனது முறைப்பாட்டில்
தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்