Courtesy: Sivaa Mayuri
திருடப்பட்ட சொத்துக்களை மீளப்பெறுதல், பணமோசடி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய தீமைகளை தடுக்கும் நோக்கில் மூன்று சட்டமூலங்களை அடுத்த வருடத்தின் முதல் காலாண்டுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார(
Harshana Nanayakkara), இதனை இன்று(04) நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
திருடப்பட்ட சொத்துக்கள்
ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போது உரையாற்றிய அமைச்சர், இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, திருடப்பட்ட சொத்துக்களை மீட்பது, குற்றங்களின் வருமானத்தைக் கண்டுபிடிப்பது மற்றும் பணமோசடி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் தொடர்புடைய அனைத்து தீமைகளைத் திறம்பட தடுப்பது ஆகிய மூன்று யோசனைகளை அறிமுகப்படுத்துவதற்கான திட்டம் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.