கல்கி 2898 AD
பிரபாஸ் – நாக் அஸ்வின் கூட்டணியில் உருவாகி வருகிற ஜூன் 27ஆம் தேதி வெளிவரவிருக்கும் பிரமாண்ட திரைப்படம் கல்கி 2898 AD. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், கமல் ஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்த ரசிகர்களை கவர்ந்துள்ளது.
குடும்பம் தான் எனக்கு எதிரி.. ஆணாதிக்க சமூகம்.. அப்பாவே தடுத்தார்: வாரிசு நடிகை அதிர்ச்சி புகார்
மேலும் இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டும் ரூ. 40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்படம் வெளிவர இன்னும் மூன்றே நாட்கள் இருக்கும் சமயத்தில் கல்கி 2898 AD படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. வெளிநாட்டு சென்சார் போர்டு உறுப்பினரும், விமர்சகருமான உமைர் சந்து தனது கல்கி 2898 AD படத்தின் விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
முதல் விமர்சனம்
“கல்கி 2898 AD ஸ்டைலில் அதிகமாகவும், Substance-ல் குறைவாகவும் உள்ளது. இது பொழுதுபோக்கு மதிப்பை குறைவாக கொண்டுள்ளது. மேலும் மிக குறுகிய கதையின் காரணமாக நமக்கு ஏமாற்றமளிக்கிறது. பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் இருவருக்கும் அதிர்ஷ்டம் இல்லை. இந்த திரைப்படம் விநியோகஸ்தர்களுக்கு இழப்புகளை ஏற்படுத்தும்” என கூறியுள்ளார்.
பொறுத்திருந்து பார்ப்போம் ஜூன் 27ஆம் தேதி மக்களின் தீர்ப்பு கல்கி 2898 AD திரைப்படத்திற்கு எப்படி இருக்க போகிறது என்று.
First Review : #Kalk2898AD from Censor Board. It is high on style and low on substance. It lacks entertainment value and is a disappointing fare due to its wafer thin plot. #Prabhas & #DeepikaPadukone Bad Luck for you. The film will entail losses to the distributors.
2⭐️/5⭐️ pic.twitter.com/NwbJfYsmWv
— Umair Sandhu (@UmairSandu) June 23, 2024