முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எதிர்க்கட்சிகளுக்கு அவசர அழைப்பு விடுத்த கம்மன்பில

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அரசை எதிர்த்து சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய
கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “காவல்துறை சேவையில் கீழ் நிலையில் உள்ள ஒருவர் காவல்துறைமா அதிபராக
நியமிக்கப்பட்டால் பதவி நிலையில் சிரேஷ்டத்துவத்தில் இருப்பவர்கள்
முரண்படுவார்கள்.

முரண்பாடுகள் 

காவல்துறைமா அதிபருக்கும் மற்றும் சிரேஷ்ட காவல்துறைமா அதிபர்களுக்கும்
இடையில் முரண்பாடுகள் தோற்றம் பெறும்.

எதிர்க்கட்சிகளுக்கு அவசர அழைப்பு விடுத்த கம்மன்பில | Kammampil Urges Opposition Unity Against Anura

பனிப்போர் நிலவும், கடந்த காலங்களிலும்
இவ்வாறான நிலை காணப்பட்டது.

சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்கு இடையிலான முரண்பாட்டை ஊடகங்களுக்குக்
குறிப்பிடுவதை காவல்துறைமா அதிபர் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

நிகழ்ச்சி நிரல்

காவல்துறைமா அதிபரின் செயற்பாடுகள் வெறுக்கத்தக்கவை, அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு
அமைய செயற்படும் போது இவ்வாறான நெருக்கடிகள் ஏற்படும்.

எதிர்க்கட்சிகளுக்கு அவசர அழைப்பு விடுத்த கம்மன்பில | Kammampil Urges Opposition Unity Against Anura

அரசாங்கத்தின் சர்வாதிகார செயற்பாடு மற்றும் போலியான வாக்குறுதிகளுக்கு எதிராக
எதிர்வரும் 21 ஆம் திகதி மாபெரும் பேரணியை ஏற்பாடு செய்துள்ளோம்.

ஒருசில எதிர்க்கட்சிகள் இந்தப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை இருப்பினும்
இந்தப் பேரணிக்கு வாழ்த்துத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளன.

எதிரான பேரணி

ஒரு
எதிர்க்கட்சி மாத்திரம் இந்தப் பேரணிக்குக் கடும் எதிர்ப்பை
வெளிப்படுத்தியுள்ளது.

மக்களுக்கு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால்தான்
எதிர்வரும் 21 ஆம் திகதி அநுர அரசாங்கத்துக்கு எதிராகப் பேரணியை ஏற்பாடு
செய்துள்ளோம்.

எதிர்க்கட்சிகளுக்கு அவசர அழைப்பு விடுத்த கம்மன்பில | Kammampil Urges Opposition Unity Against Anura

அரசியல் கொள்கை வேறுபாட்டினால் இந்தப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என்று
ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குறிப்பிடுவது தவறானது ஏனெனில்
அரசியல் கூட்டணியமைக்க நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை என்பதை எதிர்க்கட்சிகள்
முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும்.

அரசாங்கத்துக்கு எதிரான பேரணியில் சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்
என்பதே எமது விருப்பம்” என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.