முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் முன் அமைதியின்மை

கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை நிர்வகிப்பது யார்? என்ற சர்ச்சையில்
அமைதியின்மை எழுந்த நிலையில் பொலிஸார் தலையீடு செய்து அமைதியை ஏற்படுத்தியுள்ளனர்.

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை நிர்வகிக்கும் பொறுப்பை
ஏற்பதற்காக மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பக தரப்புகள் முனைந்த போது
குறித்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

மாவீரர் துயிலுமில்லம் நினைவேந்தலுக்காக 2016ஆம் ஆண்டு
அனுமதிக்கப்பட்டது. இதன் போது பிரதான சுடரினை நாடாளுமன்ற உறுப்பினர்
எஸ்.சிறீதரன் ஏற்றி, மாவீரர் குடும்பங்களும் சுடர் ஏற்றி அஞ்சலி செய்யப்பட்டதோடு, தொடர்ந்து 9 ஆண்டுகளாக அஞ்சலிக்கப்பட்டு வருகின்றன.

நிர்வாக தெரிவை நடத்த அழைப்பு 

பல்லாயிரம்
மக்கள் திரண்டு அஞ்சலிக்கும் குறித்த மாவீரர் துயிலுமில்லம் சர்வதேசத்தின்
கவனத்தை ஈர்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.

கடந்த வருடம் பிரதான சுடர் ஏற்றுவதில் ஏற்பட்ட முரண்பாடு
காரணமாக குறித்த துயிலுமில்ல நிர்வகிப்பு தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டது.

மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் எனும் அமைப்பு, மாவீரர் துயிலும்
இல்லங்கள் பொது மயப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது.

இந்த நிலையில், இன்றைய தினம் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் நிர்வாக தெரிவை நடத்த
அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

கிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் முன் அமைதியின்மை | Kanakapuram Maveerar Thuyilumillam Unrestricted  

எனினும், குறித்த பகுதிக்கு சென்றவர்கள் அதற்கு எதிர்ப்பு
தெரிவித்ததுடன், தற்போது உள்ள நிர்வகிக்கும் தரப்பே தொடர்ந்தும் செயற்பட
வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனால், குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது.

பிரச்சினைகள் இருப்பின் பொலிஸில் முறைப்பாடு 

மாவீரர் போராளிகள்
குடும்ப நலன் காப்பகம் எனும் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அவ்வமைப்பின்
அழைப்பில் சென்ற மக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அப்பகுதியில் அமைதியின்மை தொடர்ந்த நிலையில் கிளிநொச்சி பொலிசார் அங்கு
சென்று, கூட்டமாக நிற்க வேண்டாம் எனவும், பிரச்சினைகள்
இருப்பின் பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறும் தெரிவித்து மக்களை வெளியேற்றினர்.

படிப்படியாக அங்கிருந்த மக்களை வெளியேற்றிய பொலிசார் அமைதியின்மையை
கட்டுப்படுத்தினர்.

கிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் முன் அமைதியின்மை | Kanakapuram Maveerar Thuyilumillam Unrestricted

இதே வேளை, குறித்த துயிலுமில்ல வளாகத்திற்குள் அத்துமீறி செல்ல வேண்டாம் என்ற
அறிவித்தலை கரைச்சி பிரதேச சபையினர் ஒட்டியிருந்தமையும் இங்கு
குறிப்பிடத்தக்கது.

குறித்த விடயம் தொடர்பில் முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சுப்பையா
குறிப்பிடுகையில், மக்களின் நினைவேந்தலை தடுக்கும் வகையிலும், நிகழ்ச்சி நிரல்
ஒன்றின் அடிப்படையிலும் மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் எனும்
அமைப்பு செயற்படுவதாக தெரிவித்தார்.

அதற்கு ஒரு போதும் அனுமதிக்க முடியாது. இதுவரை நடந்த நடைமுறைகளே
பின்பற்றப்பட்டு நினைவேந்தல்கள் நடைபெறும். மக்கள் தெளிவாக செயற்பட வேண்டும்
எனவும் அவர் தெரிவித்தார்.

சட்ட ரீதியான நடவடிக்கைகள்

மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் எனும் அமைப்பின் தலைவர் பார்த்தீபன்
தெரிவிக்கையில், மக்கள் மயப்படுத்தப்பட்ட நிர்வாகத்தை அமைக்க வேண்டும் என்று
நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

இன்று சிறீதரனுடன் தொடர்புடைய சிலர் அங்கு குழப்பங்களை ஏற்படுத்தினர்.
நாகரீகமற்ற வார்த்தைகளை பேசினர். தொடர்ந்தும் சிறீதரனின் அரசியலிற்குள்
துயிலுமில்லங்களை அனுமதிக்க முடியாது.

சிறீதரன் தனது வாக்குக்காக கனகபுரம், முழங்காவில், தேராவில், சாட்டி ஆகிய
துயிலுமில்லங்களை பயன்படுத்துகிறார்.

கிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் முன் அமைதியின்மை | Kanakapuram Maveerar Thuyilumillam Unrestricted

அரசியலிற்குள் சிக்கியுள்ள
துயிலுமில்லங்களை மக்கள் மயப்படுத்த வேண்டும்.அதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுக்க உள்ளோம் எனவும் தெரிவித்தார்.

மேலும், மாவீரர் துயிலுமில்லங்களை அரசியல் மயப்படுத்தி, முன்னாள் போராளிகளிற்குள்
முரண்பாடுகள் ஏற்படுத்துவது தொடர்பில் பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.