கண்டி (Kandy) – மஹியங்கனை பிரதான வீதி மூடப்படவுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்று(21) மாலை 6 மணி முதல் நாளை (22) காலை 6 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விழும் அபாயத்தில் உள்ள பாறைகள் அகற்றப்படும் வரை குறித்த வீதி மூடப்பட்ட நிலையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை
இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 20 ஆம் திகதி கண்டி-மஹியங்கனை வீதி மாலை 6 மணி முதல் மூடப்பட்டு பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது.
மேலும், நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.